"கருவில் வளரும் குழந்தைக்கும் உயிர் வாழும் உரிமை உள்ளது".. 7 மாத கருவை கலைக்கக்கோரி 20 வயது இளம்பெண் தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் தீர்ப்பு..!
கருவில் வளரும் குழந்தைக்கும் கூட உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருமணம் ஆகாத 20 வயது இளம்பெண் ஒருவர், நீட் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த போது கர்ப்பமுற்றதாக கூறப்படுகிறது.இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என கூறி 7 மாத கருவை கலைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றம் ஒன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி, கருவை கலைப்பிற்கான அதிகப்பட்ச கால வரம்பான 24 வாரங்களை கடந்துவிட்டதாக கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அந்த பெண் மேல் செய்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதி, கருவுக்கு குறைபாடோ, தாயின் உயிருக்கு ஆபத்தோ இல்லாததால் கருவை கலைக்க உத்தரவிட முடியாது என தெரிவித்தார்.
Comments